Latestமலேசியா

மலேசியத் தகவல் துறையினர் வணக்கம் மலேசியாவுக்கு வருகை

கோலாலம்பூர், மார்ச் 2 – மலேசியத் தகவல் துறையின் வழியாக ஊடகம் மற்றும் நிறுவனத் தொடர்புப் பிரிவினருடன் பல்வேறு அமைச்சுகளின் ஊடக அதிகாரிகள் நல்லெண்ண நோக்குடன் கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி வணக்கம் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக 9 லட்சத்திற்கு மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் மற்றும் மாதத்திற்கு 50 மில்லியன் ‘views’ எனும் பார்வை எண்ணிக்கையோடு நாட்டின் முதன்மை இலக்கவியல் தமிழ்ச் செய்தி நிறுவனமாக திகழும் வணக்கம் மலேசியாவின் கடந்து வந்த பாதைகளையும் அதன் வளர்ச்சியையும் குறித்து தலைமைப் பொறுப்பாளர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

மலேசியத் தகவல் துறையின், ஊடகம் மற்றும் நிறுவனத் தொடர்புப் பிரிவின் துணை இயக்குனர் லாலி ஹரிசான் பிந்தி பாஹாரி அவர்களின் தலைமையில் இந்த வருகை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி, செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன், தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி ரமேஸ் பத்மனாபன், விற்பனை பிரிவு அதிகாரி ஜெகநாதன் மற்றும் வணக்கம் மலேசியாவின் குழுவினர் அனைவரும் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.

வணக்கம் மலேசியாவின் செய்தி ஆய்வு, சேகரிப்பு, தொகுப்பு மற்றும் ஒளிபரப்பின் செயல்பாடுகளை பார்வையிட்டதோடு இந்த வருகை இருதரப்புனரிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது. இரு தரப்பினரும் மக்களுக்கான அரசாங்கத்தின் நலத் திட்டங்களையும், அதன் தொடர்பான தகவல்களையும் எவ்வாறு சரியான முறையில் மக்களிடம் கொண்டுச் செல்லப்பட வேண்டும், இந்த நடைமுறையில் இரு தரப்பினரும் சந்திக்கும் சிக்கல், மற்றும் தகவல்களை கொண்டுச் சேர்ப்பதில் தொழில்நுட்ப வளர்ச்சியினை எப்படி பயன்படுத்திக் கொள்வது போன்ற விவகாரங்களும் கலந்துரையாடப்பட்டன.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு ஊடகத்தின் பங்கு மிக அவசியம். அந்த வகையில் சரியான தகவல்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வணக்கம் மலேசியா என்றும் கடப்பாட்டோடு செயல்படுவதில் உறுதி பூண்டிருப்பதாக அத்ஜன் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்தப் பயணம் தற்போதைய தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப இலக்கவியல் ஊடகத்தில் 21 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வணக்கம் மலேசியாவை ஊடகம் மற்றும் நிறுவனத் தொடர்புப் பிரிவின் துணை இயக்குனர் லாலி ஹரிசான் பாராட்டியதோடு இந்த வருகை இரு தரப்புக்கும் பயனாக அமைந்நத்காக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!