Latestமலேசியா

மலேசியர் இந்திய முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் 22 முன்னாள் உறுப்பினர்களுக்கு PJM விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது

ஜோகூர் பாரு , மே 14- மலேசிய முன்னாள் முப்படை வீரர்களின் ஜோகூர் சங்கத்திற்கு அண்மையில் ஜோகூரை சேர்ந்த 500 முன்னாள் உறுப்பினர்களுக்கு தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் PJM எனப்படும் Pingat Jasa Malaysia விருதை வழங்கி கௌரவித்தார். ஸ்கூடாய் Taman Pulai Utama மண்டபத்தில் இந்த விருதளிப்பு சடங்கு நடைபெற்றது. அவசர நிலை காலத்தில் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகள் மற்றும் மலாயாவிற்கு எதிராக இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பு பிரகடனத்தின் அவசரநிலையின்போது முப்படையில் பணியாற்றிய மலேசிய முன்னாள் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் துணிச்சலை அங்கீகரிக்கும் வகையில் மலேசிய சேவை விருதை பெற்றவர்களில் மலேசிய இந்தியர் முன்னாள் இந்திய முப்படை வீரர்கள் சங்கத்தின் ஜோகூரி கிளையின் 22 உறுப்பினர்களும் அடங்குவர் என இந்த நிகழ்சி ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான K.S Rony ,kannaiah Appudu ,Francis Benedict ஆகியோர் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!