Latestமலேசியா

மலேசியாவின் பொருளாதாரம் 3.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 16 – 2023-ஆம் ஆண்டு, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் மிதமான நிலையில் 3.7 விழுக்காடாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய 2022- ஆம் ஆண்டு, மிகுந்த சவாலான வெளிப்புற சூழலில் 8.7 விழுக்காடு வலுவான வளர்ச்சியை பதிவுச் செய்த நாட்டின் பொருளாதாரம் மீண்டும் மிதமான சூழலுக்கு திரும்பியுள்ளதாக, பேங்க் நெகாரா மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், மெதுவான உலகளாவிய வர்த்தகம், தொழில்நுட்ப வீழ்ச்சி, அரசியல் பதட்டங்கள் மற்றும் கடுமையான பணவியல் கொள்கைகள் ஆகியவை அதற்கு காரணமாக இருக்கலாமென, ஓர் அறிக்கையின் வாயிலாக பேங்க் நெகாரா கூறியுள்ளது.

உள்நாட்டை பொருத்த வரையில், 2022-ஆம் ஆண்டு தொடங்கிய போது, கொள்கை அளவிலான ஆதரவு பின்னடைவை சந்தித்தாலும், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஆட்பலத் துறையின் மீட்சி ஆகியவை 2023-ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்ததை பேங்க் நெகாரா சுட்டிக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!