Latestமலேசியா

மலேசியாவின் மிக பிரபலமான கார்: Myvi-யை அதிரடியாகப் பின்னுக்குத் தள்ளிய Bezza

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – மலேசியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார் என்ற பெருமையை Perodua Myvi-யிடம் இருந்து Perodua Bezza தட்டிப் பறித்திருக்கிறது.

மலேசியச் சாலைகளில் ஜந்தாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய Myvi-யை கடந்தாண்டு Bezza பின்னுக்குத் தள்ளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலைப் போக்குவரத்துத் துறை JPJ வெளியிட்ட தகவலின் படி, 2023-ல் பதிவுச் செய்யப்பட்ட Bezza கார்களின் எண்ணிக்கை 56,735 ஆகும்.

Myvi-யோ வெறும் 45,014 கார்களை மட்டுமே பதிவுச் செய்து இரண்டாம் இடத்திற்கு இறங்கியது.

குறைவான விலை, சிறந்த எரிபொருள் பயன்பாடு மற்றும் பெரிய லக்கேஜ் இட வசதி என Bezza-வுக்கு இருக்கும் கூடுதல் பலமே, இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இவ்வேளையில் கூகளில் Trending-ஙாக இருக்கும் கார்களில் Myvi-யே இன்னும் முதலிடம் வகிக்கிறது.

Myvi குறித்த தேடல்கள் கடந்தாண்டு சராசரியாக 82-டாக பதிவாகிய நிலையில் Bezza குறித்த சராசரி தேடல்கள் 38-டாக பதிவாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!