ஜோகூர் பாரு, செப்டம்பர் 6 – குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என 46 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகள் negative எனும் எதிர்மறையான முடிவுகளே கிடைத்திருப்பதாகச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது.
அதன் அடிப்படையில், இவ்வாண்டு இதுவரை யாரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் (Dato Seri Dzulkefy Ahmad) கூறினார்.
மலேசியாவில் கடந்தாண்டு பதிவான அதிகக் கடுமையற்ற கிளேட் 2 ரகத்தைச் சேர்ந்த 9 குரங்கு அம்மை பாதிப்புகள் மட்டுமே, இதுவரை இறுதியான பதிவாகும் என்றார், அவர்.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் கிட்டத்தட்ட 5.2 மில்லியன் பயணிகளிடம் அனைத்துலக நுழைவாயிலில் சோதனைகள் நடத்தப்பட்டது.
அந்த சோதனையிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.