Latestஉலகம்

கடும் வெப்பத்தின் எதிரொலி மணிலா விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 19 வாகனங்கள் தீயில் சேதம்

மணிலா, ஏப் 23 – மணிலா அனைத்துலக விமான நிலையத்தில் கார் நிறுத்திவைக்கப்படும் பகுதியில் கடும் வெப்பத்தினால் புல்லில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியதால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 19 வாகனங்கள் சேதத்திற்கு உள்ளாகின. இந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை . பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து வாகனங்கள் பற்றி எரியும் கரும்புகை குறித்த காணொளி சமூக வலைத்தலங்களில் வைரலாகியது. மணிலா அனைத்துலக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் கார் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் தீயில் பாதிக்கப்பட்டன.

மணிலா விமான நிலையப் பகுதியில் வெப்ப அளவு 41 செல்சியஸாக இருந்தது. கார் நிறுத்துமிடத்தில் முதலில் ஒரு கார் தீப்பிடித்ததால் கடும் சுட்டெரிக்கும் வெயிலினால் இதர வாகனங்களுக்கும் தீ பரவின. எனினும் இந்த தீவிபத்தினால் மணிலா விமான நிலையத்தின் விமான நடவடிக்கை பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லையென மணிலா விமான அனைத்துலக விமான நிலையத்தின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!