Latestமலேசியா

மலேசியாவில் கோவிட்-19 JN.1 திரிபு வைரஸ்; சுற்றுலா செல்வோர் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 23 – கோவிட்-19 JN.1 திரிபு வைரஸ் நேற்று மலேசியாவிற்குள் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சரவாக்கின் பல பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 61 மாதிரிகளில் JN.1 திரிபு தடயங்களைக் கண்டறியப்பட்டுள்ளது என்று மலேசிய சரவா பல்கலைக்கழகத்தின் உடல் நலம் மற்றும் சமூக மருத்துவக் கழக இயக்குநர் டாக்டர் டேவிட் பெரேரா கூறியுள்ளார்.

JN.1 பொது சுகாதரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவரை எந்த ஆதரமும் இல்லை என்றாலும் மோசமான ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு ஆபத்தை உருவாக்கலாம் என்று நிபுனர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

வயதான நோயாளிகள், நோய் எதிர்ப்பு குறைப்பாடுகள் உள்ளவர்கள், மற்றும் நீரிழிவு நோய்கள் போன்ற பலவிதமான நோய்கள் உள்ளவர்கள் JN1 திரிபு வைரஸ் போன்ற துணைவகைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு மரணமும் ஏற்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி சுற்றுலா செல்வோர் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!