Latestமலேசியா

மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது Love Me International!

கோலாலம்பூர், ஜூன் 26 – தனது தனித்துவமான அழகு சாதனப் பொருட்களால், மக்களிடையே மிகவும் பிரபலமான Love Me International, மலேசியா சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக தனது பெயரை பதித்துள்ளது.

கடந்த 6-ஆம் திகதி 6-ஆம் மாதம், இடைவிடாத 48 மணி நேரலையை செய்து, வாடிக்கையாளர்களின் அதீத வரவேற்பை பெற்று அச்சாதனையைப் புரிந்திருக்கிறது Love Me International.

தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கில், Love Me Jumbo Sales எனும் 48 மணி நேர நேரலையில் பல சிறப்பு சலுகைகளுடன் தங்களது சுய Formular வழி பிரத்தேயகமாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

அதன் வழி 3658 orders-உடன், RM 186,342.76 விற்பனைகளையும் அந்த நேரலையில் பெற்று சாதனைப் படைத்துள்ளது LoveMe International.

கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தொலைநோக்கு பார்வையாக வைத்து செயல்படும் LoveMe Internationalக்கு, இச்சாதனை மிகப் பெரிய மகுடமாக அமைந்துள்ளது.

முன்னதாக, 24 மணி நேர நேரலையில் கிடைத்த தங்களது வாடிக்கையாளர்களின் வரவேற்பை தொடர்ந்து, தற்போது இந்த முயற்சியை தனது குழுவினருடன் மேற்கொண்டுள்ளார் Love Me International நிறுவனத்தின் தோற்றுனர் Kalai G.

இந்த 48 மணி நேர நேரலையில் நடந்த அதிருஷ்ட குலுக்கலில், வாடிக்கையாளர் ஒருவர் Bezza ரக காரைத் தட்டிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், கடந்த 21ஆம் திகதி அன்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் Kytee Herbals நிறுவனர் Sudha Devi, Anjali Mua நிறுவனர் Anjali Manchanda, Bobeyond நிறுவனர் Inthumathi Subarmaniam, Oaktree Fitness Yoga நிறுவனர் Revathy Veerayah மற்றும் பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!