Latestமலேசியா

மலேசிய இந்தியப் பாரம்பரிய வைத்தியர்களுக்கான முன் பதிவு நடவடிக்கை

கோலாலம்பூர், பிப் 8 – மலேசிய இந்தியப் பாரம்பரிய மருத்துவக் கழகமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலேசியாவில் உள்ள முறையாகப் பதிவு பெறாத பாரம்பரிய வைத்தியர்களைப் பதிவு செய்யும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் மலேசிய முழுவதிலும் உள்ள இன்னும் பதிவு பெறாத சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் செய்து வருபவர்களை பதிவு செய்யும் நோக்கில் பிரிக்பீல்ட்ஸ் மெனாரா சென்ட்ரல் விஸ்தாவில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பதிவினை மலேசிய சுகாதார அமைச்சின் T&CM கீழ் ஒரு குடையாக இயங்கி வரும் மலேசியா இந்திய பாரம்பரிய மருத்துவ கழகம் PEPTIM வழிநடத்தியது. அக்கழகத்தின் தலைவர் வைத்தியர் சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பதிவில் ஏறக்குறைய இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 29ஆம் திகதியின் கால கெடுவுக்குப் பின்னர் பதிவு பெறாத பாரம்பரிய வைத்தியர்கள் தொடர்ந்து வைத்தியம் செய்யத் தகுதி அற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வைத்தியர்கள் இந்த முன் பதிவின் மூலம் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை PEPTIM கழகம் வழிகாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இன்னமும் பதிவு பெறாத சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் வரும் 29ஆம் திகதிக்குள் PEPTIM கழகத்தின் சித்த வைத்திய பிரிவின் பொறுப்பாளர் VP. SIDDHA AGASTHIAR – 019 414 2437 என்பவரை தொடர்பு கொண்டு பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!