Latestமலேசியா

மலேசிய இலக்கவியல் வருகை கார்டை பயன்படுத்துவதில் சிக்கல் கிடையாது – இந்திய சுற்றுப்பயணிகள் கருத்து

கோலாலம்பூர், டிச 4 – இந்தியா மற்றும் சீனா சுற்றுப்பயணிகளுக்கு விசா விலக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டினருக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MDAC எனப்படும் மலேசிய இலக்கவியல் வருகை கார்ட்டை பூர்த்தி செய்வதில் எந்தவொரு சிக்கலையும் தாங்கள் எதிர்நோக்கவில்லையென இந்திய சுற்றுப்பயணிகள் தெரிவித்தனர். சனிக்கிழமையன்று தமது கணவருடன் மலேசியா வந்து சேர்ந்தபோது தாம் எந்தவொரு பிரச்னையையும் எதிர்நோக்கவில்லையென 67 வயதுடைய Ruku தெரிவித்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக தமது உறவினர் MDAC கார்டை பூர்த்திசெய்ததாக Ruku கூறினார்.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டினர் இங்கு வந்து சேர்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே MDAC கார்டை பூர்த்தி செய்து சமர்ப்பித்துவிட வேண்டும். இதனிடையே அவசரமாக பயணம் மேற்கொள்வோர் மூன்று நாட்களுக்குள் MDAC கார்டை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும் சூழ்நிலை குறித்து வினவப்பட்டபோது இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என குடிநுழைவுத்துறை தெரவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!