Latestமலேசியா

மலேசிய ஏவியேஷன் குழுமத்தின் புதிய Journify செயலி அறிமுகம் – உங்கள் பயணத்திற்கான சிறந்த தேர்வு!

கோலாலம்பூர், ஜூலை 4 – மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதுதான் விடுமுறை பயணமாகும்.

அவ்வகையில், அப்பயணத்தை தனது பயணிகளுக்குச் சுவாரஸ்யமாக உருவாக்க, மலேசிய ஏவியேஷன் குழுமம் Journify Holidays எனும் புதிய செயலியை நேற்று அறிமுகப்படுத்தியது.

அந்த செயலி, விமான டிக்கெட்டுகள் மட்டுமல்லாது ஹோட்டல் வசதிகளையும் இணைத்து, ஒருவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ப பயண வரவு செலவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக MAG குழுமத்தின் சந்தைப்படுத்தும் பிரிவு தலைவர் Hemanth Jayaraman விவரித்தார்.

மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் Firefly விமான சேவைகள் முதல் ஹோட்டல் வசதிகள் வரை பயணிகள் தங்களின் முழு விடுமுறையையும் சிரமமின்றி இந்த செயலியின் வழி திட்டமிட்டு முன்பதிவு செய்ய முடியும் என்றார் Hemanth Jayaraman.

இதனிடையே, பயண மற்றும் வாழ்க்கை முறை எனும் கோட்பாட்டின் தளமான Journify Holidays செயலின் தொடக்க நிகழ்ச்சி, நேற்று தொடங்கி ஜூலை 3 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை Lot 10 Bukit Bintang-க்கு வெளியே மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பயண ஆர்வலர்கள், Maldives, Bangkok, Langkawi போன்ற இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைத் தட்டிச் செல்லலாம்.

நேற்று அறிமுகமான Journify செயலின் சில சிறப்புச் சலுகைகளையும் Hemanth Jayaraman தெரிவித்தார்.

சுமூகமான பயணத்தை மேற்கொள்ள Journify செயலியை, App Store அல்லது Google Play Store வழி, தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!