Latestமலேசியா

மலேசிய ஒலிம்பிக் உடையை அவசரமாக அறிமுகப்படுத்தியதற்காக, ஏற்பாட்டாளர் மன்னிப்பு கோரினார்

கோலாலம்பூர், ஜூன் 28 – 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தேசிய அணியினரின் அதிகாரப்பூர்வ உடை, அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டதை, அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான மை கிரியேட்டிவ் மொமெண்ட்ஸ் (My Creative Moments) ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, தலைநகரிலுள்ள, புகழ்பெற்ற பேரங்காடி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 உலக ஒலிம்பிக் தினக் கொண்டாட்டத்தின் போது, அந்த உடைகள் அறிமுகம் கண்டன.

எனினும், அந்நிகழ்ச்சியில் ஏதேனும் குறை இருந்தால், OCM – மலேசிய ஒலிம்பிக் மன்றம், இளைஞர் விளையாட்டு அமைச்சு உட்பட விளையாட்டு இரசிகர்களிடமும் தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக, My Creative Moments நிர்வாக இயக்குனர் வோங் காங் வூன் (Wong Kang Soon) தெரிவித்துள்ளார்.

தங்கள் தரப்பின் குறைப்பாடுகளை ஒப்புக் கொள்வதாகவும், அந்நிகழ்ச்சியின் நிர்வாகம் மற்றும் அமைப்பில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதற்கு முழு பொறுப்பேற்பதாகவும், வோங் கூறியுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் அறிமுகம் கண்ட 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆடைகள், இணையவாசிகளின் கேலி கிண்டலுக்கு இலக்காகியுள்ளது.

அந்த உடைகளை, முந்தைய அதிகாரப்பூர்வ உடையுடன் ஒப்பிடுகையில், “பின்தங்கி, உத்தவேகம் இல்லாதது போல” இருப்பதாக பலர் கருத்துரைத்துள்ளனர்.

அதோடு, உண்மையான விளையாட்டாளர்களை பயன்படுத்தாமல், மாதிரி பொம்மைகளை கொண்டு அந்த உடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது குறித்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!