Latestவிளையாட்டு

மலேசிய காற்பந்து குழுவுக்கு தென் கொரிய பயிற்சியாளர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் – எம்.கருத்து

கோலாலம்பூர், ஜன 22 – மலேசிய காற்பந்து குழுவின் பயிற்சிக் குழு தலைவராக  தென் கொரியாவின் கிம் பான் கோன் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என மலேசிய காற்பந்து குழுவின் முன்னாள் பயிற்சியாளரான டத்தோ M. கருத்து (Karathu) தெரிவித்திருக்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆசிய கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டிக்கு மலேசிய குழு தகுதி பெற்றதற்கு கிம் பான் கோன் முக்கிய  பங்கை ஆற்றியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது என கருத்து சுட்டிக்காட்டினார்.  ஆசிய கிண்ண விளையாட்டுப் போட்டியில் மலேசிய குழு வியாழக்கிழமையன்று தனது கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவுடன்  மோதவிருக்கிறது. ஏற்கனவே ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் குழுவுடன் மலேசிய குழு   தோல்வி கண்டதால் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.  இந்த நிலையில் அவரது சேவை தொடர்ந்து  நீடிக்க வேண்டும் என கருத்து  வலியுறுத்தினார். 

பொதுவாகவே குழு தோல்வி அடைந்தால்  பயிற்சியாளர் மீதுதான்  குறைகூறப்படுகிறது. உண்மையில் பஹ்ரைன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசிய குழுவினர் மிகவும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினர். ஆனால்  ஆட்டம்  முடிவடைவதற்கு கடைசி வினாடிகளில்  சற்று மெத்தனப் போக்கினால் பஹ்ரைன் குழு கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. மலேசிய குழுவினர் சற்று கூடுதலாக  ஆட்டத்தில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு புள்ளியை பெற்றிருக்க முடியும் என கருத்து தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு  தேசிய காற்பந்து குழுவின் பயிற்சியாளர் பொறுப்பை கிம் எடுத்துக்கொண்டது முதல் மலேசிய  குழு 17 வெற்றிகளை பெற்றுள்ளது.  இரண்டு ஆட்டங்களில் மலேசிய குழு சமநிலை மற்றும் எட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தது. இதன்வழி  தற்போது உலகின் மலேசிய காற்பந்து குழு 130 ஆவது இடத்தில் உள்ளது. எனவே மலேசிய குழுவுக்கு கிம் தொடர்ந்து பயிற்சியாளராக இருப்பதுதான் இப்போதைக்கு சிறந்த முடிவாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!