
லங்காவி, நவம்பர்-9,
மியன்மார் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 90 கள்ளக்குடியேறிகளை ஏற்றியிருந்த படகொன்று, லங்காவி அருகே மலேசிய–தாய்லாந்து எல்லைப் பகுதியில் மூழ்கியது.
இதுவரை 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரு Rohingya பெண் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.
300 பேர் கொண்ட பெரியக் கப்பலிலிருந்து பிறகு 3 சிறிய படகுகளாக அவர்கள் பிரிக்கப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டதாக கெடா போலீஸ் கூறியது.
இப்படகு மூழ்கிய நிலையில், மற்ற 2 படகுகளின் நிலை தெரியவரவில்லை.
படகுகளில் வந்த கள்ளக்குடியேறிகள் இந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக, கடத்தல் கும்பல்களிடம் RM13,000 வரை பணம் கட்டியுள்ளனர்; சிலர் சொந்த ஊரில் நிலத்தை விற்று பயணம் செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மலேசிய கடற்படை மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.



