கோலாலம்பூர், நவம்பர்-21, ஆகஸ்ட் மாதம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்துக்கு, கோலாலம்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமல்ல.
அந்த நேரத்தில் அடைமழையால் சில சம்பவங்கள் தற்செயலாக நிகழ்ந்ததாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா கூறினார்.
நில அமிழ்வு ஏற்பட்டதிலிருந்து, கோலாலாம்பூர் மாநகர மன்றம் DBKL, அங்கு நில அமைப்பு மீதான ஆய்வை மேற்கொண்டு வருகிறது; அது தற்போது இறுதி கட்டத்திலிருப்பதாக அமைச்சர் சொன்னார்.
மேலும், நிலத்தடி துவாரங்களையும் மண் அசைவையும் கண்டறிய, உரிய புவி இயற்பியல் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
அதே நீண்ட காலத் திட்டமாக, bore hole முறையில் மண்ணில் ஆழமாகத் துளையிட்டு DBKL மண்ணாய்வை மேற்கொள்ளும் என்றார் அவர்.
கோலாலாம்பூர், செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் மக்களவையில் எழுப்பியக் கேள்விக்கு Dr சாலிஹா அவ்வாறு பதிலளித்தார்.
மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்டதற்கு, புவியியல் மற்றும் மண் அமைப்பு முறையே காரணமென, இதற்கு முன் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் ( Datuk Seri Fadhillah Yusof) கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி, ஆகஸ்ட் 23-ஆம் தேதி, மலாயன் மென்ஷன் முன்புறம் நடந்து சென்ற போது, 8 மீட்டர் ஆழத்திற்கு திடீரென தோன்றிய பள்ளத்தில் விழுந்து காணாமல் போனார்.