Latestமலேசியா

பேராக்கில் மகள்களைக் காப்பாற்ற முயன்ற தாய் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு

சுங்கை சிப்புட், நவம்பர் 12 – பேராக், கம்போங் லண்டாப் (Kampung Landap), சுங்கை ஜாலோங் திங்கி (Sungai Jalong Tinggi) பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், தனது இரு மகள்களைக் காப்பாற்ற முயன்ற தாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணியளவில், ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரு சிறுமிகளும் ஆற்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற பெற்றோரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கிராம மக்களின் உதவியுடன் இரு சிறுமிகளும் அவர்களின் தந்தையும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், தாய் மாலை 6.50 மணியளவில் ஆற்றங்கரையில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மழைக்காலத்தில் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிப் பகுதிகளில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு சுங்கை சிப்புட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்தெண்டன் சரண் ஐ வான் (Charan Ai Wan) பொதுமக்களை அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!