Latestமலேசியா

மாற்றுத் திறனாளி ஆடவர் மீது வெந்நீர் ஊற்றிய பெண் 4 நாட்களுக்கு தடுத்து வைப்பு

பாலேக் பூலாவ், ஏப் 21 – பாலேக் பூலாவ், Jalan Rajawali I- Park கில் மாற்றுத் திறளாளி மீது வெந்நீர் ஊற்றிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 39 வயது பெண் விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு நாட்களுக்கு தடுத்துவைக்கும் உத்தரவை போலீசார் பெற்றனர். விற்பனை உதவியாளரான அந்த பெண்ணுக்கு எதிராக புதன்கிழமைவரை தடுத்து வைக்கும் உத்தரவு Balik Pulau Majistret நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் Chia Huey Ting முன்னிலையில் பெறப்பட்டது. சித்ரவதை சட்டத்தின் 324 ஆவது விதியின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.

உடலின் முன்புறம் மற்றும் பின்புறப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மணி 9.20 அளவில் தமது அண்டை வீட்டுக்காரப் பெண்மணியால் சுடுநீர் ஊற்றப்பட்ட 33 வயதுடைய மாற்றுத் திறனாளி ஆடவர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த 20 வினாடிகளைக் கொண்ட காணொளி பதிவு சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இரவு மணி 9. 12 அளவில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே அந்த பெண் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்த கைப்பை மற்றும் இந்த சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட நீர் கலம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக தென் மேற்கு வட்டாரத்தின் போலீஸ் துணைத் தலைவர் Jafri Md Zain தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!