Latestமலேசியா

மாற்று திறனாளி சோலைராஜ் மீது சுடுநீர் ஊற்றிய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை ரி.ம 6,000 அபராதம்

பாலேக் பூலாவ், ஏப் 23 – மாற்றுத் திறனாளியான Solairaj மீது சுடுநீர் ஊற்றி காயப்படுத்திய குற்றச்சாட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட Oo Saw Kee என்ற பெண்ணுக்கு 10ஆண்டு சிறை மற்றும் 6,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 33 வயதுடைய Solairaj மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் மீது சுடுநீர் ஊற்றியதாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டற்கு அடையாளமாக 39 வயதுடைய Oo Saw kee தலையசைத்தார். ஏப்ரல் 19 ஆம் தேதியன்று காலை மணி 9.24 மணியளவில் Bayan Lepas சிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டிற்கு அருகே போட்டலில் வைத்திருந்த சுடுநீரை Solairaj மீது ஊற்றியதாக Balik Pulau செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி Azhal Fariz Ahmad முன்னிலையில் Oo Saw Kee மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 326 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை விற்பனை பிரதிநிதியான Oo Saw Kee ஒப்புக் கொண்டார். Solaimuthu அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 16ஆவது மாடியிலுள்ள தமது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் மீது Oo Saw kee சுடுநீர் ஊற்றியதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கூடியபட்சம் 20 ஆண்டுவரை சிறை, அபராதம் மற்றும் பிரம்படி அல்லது அவற்றில் இரண்டு இரண்டு தண்டனைகள் வழங்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 326 ஆவது விதியின் கீழ் Oo Saw Kee மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர் நோர்டின் இஸ்மாயில் இந்த குற்றச்சாட்டை கொண்டு வந்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட Oo Saw Kee யின் சார்பில் வழக்கறிஞர் Edric Loo ஆஜரானார். Oo Saw Kee யின் இரக்கமற்ற செயலினால் உடலில் காயத்திற்கு மட்டுமின்றி மனரீதியிலும் Solairaj அனுபவித்துவரும் வேதனையை கவனத்தில் எடுத்துக்கொண்டு கடுமையான தண்டணை விதிக்கும்படி நோர்டின் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். Solairaj தனது உடலின் முன்புறம் மற்றும் பின்புறப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தினால் அவர் இன்னமும் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து Oo Saw Kee க்கு 10 ஆண்டு சிறை மற்றும் 6,000 ரிங்கிட் அபராதம் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!