Latestமலேசியா

மாற்று திறனாளி மீது பெண் சுடுநீர் ஊற்ற காரணம் என்ன ? போலீஸ் விளக்கம்

ஜார்ஜ்டவுன், ஏப் 22 – பாயான் லெப்பாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மின் படிக்கட்டிற்கு அருகே மாற்று திறனாளி ஆடவர் மீது பெண் ஒருவர் சுடுநீர் ஊற்றியதற்கு பழைய கருத்து வேறுபாடு காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன் சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட ஆடவருக்குமிடையே தவறான புரிந்துணர்வு ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Kamarul Rizal தெரிவித்தார். அவர்கள் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இருப்பதால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.

இதுவரை நாங்கள் பாதிக்கப்பட்டவர் உட்பட மூன்று நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளோம். விசாரணை இன்னும் தொடர்கிறது. அது முடிந்தால், நாங்கள் முன்கூட்டியே குற்றம் சாட்டுவோம், இல்லையென்றால், நாங்கள் சந்தேக நபரை தடுத்து வைப்போம் என Kamarul Rizal தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கைகளின் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்புக்காக சந்தேக நபரை சுகாதார கண்காணிப்புக்கு அனுப்புவது குறித்தும் போலீசார் பரிசீலித்து வருவதாகவும், இதுவரை நடந்த விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
33 வயதான மாற்றுத் திறனாளி மீது சுடுநீரை வீசிய சம்பவத்தை விசாரிப்பதற்காக 39 வயதான விற்பனை உதவியாளரான அந்த பெண் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். உடலின் முன் புறம் மற்றும் பின்புறப் பகுதியில் சுடுநீர் ஊற்றப்பட்டதால் காயத்திற்குள்ளான அந்த மாற்று திறனாளி இன்னமும் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த ஆடவரின் தோலில் ஆறு விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் அது முழுமையாக குணம் அடைவதற்கு இன்னும் 2 வாரங்கள் பிடிக்கும் என இதற்கு முன் பினாங்கு பொது மருத்துவமனையின் இயக்குனர் Dr Goh Hin Kwang, தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!