Latestமலேசியா

மித்ராவின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான இலக்கவியல் ஊடகத் திறன் பயிற்சி – உடனே பதியுங்கள்

கோலாலம்பூர், டிச 12 – தற்போது இலக்கவியல் ஊடகம் சமூகத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு அத்துறையில் திறன் பெற்றவர்களுக்கு பரந்த வேலை வாய்ப்பும் பெருகி உள்ளது. இத்துறையில் இந்திய இளைஞர்கள் தங்களீன் தொழில் திறனை கற்று, அதனை காலத்துக்கு ஏற்ப விரிவாக்கிக் கொண்டால் இத்துறையில் புதிய வேலை வாய்ப்புகளை பெறுவதோடு வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் மித்ராவும் TM Allied Resources நிறுவனமும் இணைந்து 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட கல்லூரியில், படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்த, வேலைத் தேடிக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே வேறொரு துறையில் வேலை செய்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சியை வழங்குகின்றன.

30 இடங்கள் மட்டுமே உள்ள இந்த பயிற்சியில் நாடு தளுவிய நிலையில் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனே டிசம்பர் 31ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

எழுத்து, கேமரா இயக்குவது, எடிட்டிங் எனச் சொல்லப்படும் படத்தொகுப்பு மற்றும் படைப்பாளர் என அனைத்து ஊடக அம்சங்களையும் இந்த பயிற்சி உள்ளடக்கியிருக்கும்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இந்த பயிற்சிக்கு தொலைவிலிருந்து வரும் இளைஞர்களுக்கு தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்துத் தரப்படும்.

இத்துறையில் பரந்த அனுபவமும் திறனும் கொண்ட பயிற்சியாளர்கள இதனை வழிநடத்தவுள்ளனர்.

இதில் தேர்ச்சிப் பெறும் குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுக்கு வேலை வாய்ப்பு உத்திரவாதமும் வழங்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் உடனே பதியுங்கள்.

பதிவுக்கு திரையில் காணூம் QR Code-ஐ ஸ்கேன் செய்து விண்ணப்பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

மேல் விவரங்களுக்கு :011-51722563 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!