புத்ராஜெயா, ஜூலை-16, மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநராக பிரபாகரன் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய தலைமை இயக்குநர் ரவிக்குமார் சுப்பையா-வுக்கு மாற்றாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை, ஜூலை 17-ஆம் தேதி பிரதமர் துறையில் அவர் அப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளவிருக்கின்றார்.
பிரபாகரன் முன்னதாக, பிரதமர் துறையின் மூத்தத் துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அவாங் அலிக் ஜெமானை (Datuk Awang Alik bin Jeman) இன்று நேரில் சென்றுக் கண்டார்.
இப்புதியப் பொறுப்பை திறம்பட ஆற்ற பிரபாகரன் கணபதிக்கு பிரதமர் துறையின் சார்பில் அவாங் வாழ்த்தும் தெரிவித்தார்.