சங்லுன், ஏப்ரல்-1, கெடா, சங்லுனில் சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் மெட்ரிகுலேஷன் கல்லூரியின் கூரை தீப்பற்றிக் கொண்டது.
தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, கல்லூரியின் பிளோக் C2 கட்டடத்தின் கூரை தீயில் எரிவதைக் கண்டது.
உடனடியாகத் தீயை அணைக்கும் பணியில் இறங்கி, தீயை முமுமையாகக் அது கட்டுக்குள் கொண்டு வந்தது.
என்றாலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அத்துறை கூறியது.
அத்தீ சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் உறுதிபடுத்தப்பட்டது.