
கோலாலம்பூர், ஜூலை-11-8TV தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘Jasmine Project Love மூன்றாவது பருவம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு, தலைநகரில் நேற்று பாராட்டுடன் கூடிய மதிய உணவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Jasmine Food வழங்கும் 24 பாகங்களைக் கொண்ட இத்தொடர், மலேசியா முழுவதும் உள்ள பின்தங்கிய குடும்பங்களின் உண்மை வாழ்வியல் கதைகளையும் அவர்களின் தேவைகளையும் ஆவணப்படுத்தி ஒளிபரப்பியது.
Media Prima-NSTP மனிதநேய நிதியத்தின் கீழ் செயல்படும் 8TV Project Love நிதியத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட மொத்தம் 192,000 ரிங்கிட் நன்கொடை, இந்தத் தொடரில் இடம்பெற்ற 24 குடும்பங்களுக்கு தலா 8,000 ரிங்கிட் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Holiday Inn கோலாலம்பூர் பங்சாரில் நடைபெற்ற இந்நிகழ்வில், Media Prima குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரஃபிக் ரசாலி (Rafiq Razali) மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதே சமயம், Jasmine Food தலைமை செயலதிகாரி
Alan Kwong, அதன் விளம்பரப் பிரிவு தலைவர் Kow Ai Nah உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த நற்பணி திட்டத்திற்கு ஆதரவளித்த Rumah Charis, CCEP Foundation உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இந்த பருவத்தின் நெகிழ்ச்சியான வாழ்வியல் கதைகளை பொதுமக்கள் ‘Tonton’ செயலி வழி மீண்டும் கண்டு மகிழலாம்.



