Latestமலேசியா

POLISAS மாணவியைக் கொலை செய்ததாக 19 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு

குவாந்தான், அக்-12–Sultan Haji Ahmad Shah பாலிடெக்னிக் (POLISAS) மாணவியைக் கொலை செய்ததாக 19 வயது இளைஞர் மீது இன்று குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட F. Alan Stevekumar, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார். இருப்பினும், அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலை 4.32 மணிக்கும் 4.55 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் Jalan Air Putihவில் உள்ள ஒரு வீட்டில் M. Elisa Jonova எனும் அம்மாணவியைக் கொலை செய்து மரணம் விளைவித்த குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்கியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், 12க்குக் குறையாத பிரம்படிகள் வழங்கப்படும்.

அவ்வழக்கு நவம்பர் 12ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

19 வயது மாணவி வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சந்தேக நபர் அளித்த தகவலின் அடிப்படையில் அச்சம்பவம் தெரிய வந்தது. தமக்கும் தமது காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்ததாக குவாந்தான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!