Latestமலேசியா

ஒற்றுமை விளையாட்டு லீக்: கலாச்சார பாரம்பரியத்தையும் மக்கள் ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது

கங்கார்,அக்டோபர்-11,ஒற்றுமை விளையாட்டு லீக் அல்லது Liga Sukan Uniti, விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மக்களிடையேயான நல்லிணக்கத்தையும் பலப்படுத்துகிறது.

​பெர்லிஸ், கங்ஙாரில் நடைபெற்ற வட மண்டல ஒற்றுமை விளையாட்டு லீக் தொடக்க விழாவில் பேசிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹஸ்லினா அப்துல் ஹமீட் இதனைத் தெரிவித்தார்.

கலாச்சார அடையாளங்களை மறக்காமல், சுறுசுறுப்பான மற்றும் போட்டித்தன்மை கொண்ட தலைமுறையை உருவாக்குவது அவசியம் என அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

​இம்முறை வட மண்டல போட்டி தனித்துவமான முறையில் நவீன மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளை ஒன்றிணைத்துள்ளது.

கோத்தா காயாங் அருங்காட்சியகத்தில் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகளும், D’Futsal மையத்தில் நவீன விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன.

​இந்த அணுகுமுறை இன்றைய தலைமுறையினர் பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைகிறது.

ஒன்றுபட்ட, நல்லிணக்கமிக்க நாட்டை உருவாக்கும் கூட்டுப் பொறுப்பை வளர்ப்பதே இத்தகைய முன்னெடுப்புகளின் தலையாய நோக்கமாகும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!