Latestமலேசியா

முகநூலில் பேரரசரை அச்சுறுத்தும் கூற்றுகளை வெளியிட்ட பெல்டா விவசாயிக்கு : RM12,000 அபராதம்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – முகநூல் வாயிலாக, பேரரசருக்கு மிரட்டல் விடுத்த பெல்டா விவசாயி ஒருவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

45 வயது சம்சூரி ரம்லி எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவன் ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

“PN சிறந்தது. பேரரசருக்கு இளைஞர்களின் எச்சரிக்கை. அன்வாரை வீழ்த்துங்கள், இல்லையோல் நாங்கள் பேரரசரை வீழ்த்துவோம்” எனும் அச்சுறுத்தும் வாசகம் பதிக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை, பிறரை புண்படுத்தும் நோக்கில், வேண்டுமென்றே தனது முகநூலில் பகிர்ந்ததாக சம்சூரி குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தான்.

கடந்தாண்டு, ஆகஸ்ட்டு மாதம் 13-ஆம் தேதி, மாலை மணி 5.33 வாக்கில், தலைநகர், புக்கிட் பிந்தாங்கிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சம்பஞ்சார் பேராக் (SamBanjar Perak) எனும் முகநூலில் அவன் அந்த உள்ளடக்கத்தை வெளியிட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!