Latestமலேசியா

முன்னாள் சுகாதார அமைச்சர் சுவா ஜூய் மெங் காலமானார்

கோலாலம்பூர், டிச 4 – நாட்டில் நீண்ட காலம் சுகாதார அமைச்சராக சேவையாற்றிய டத்தோ Chua Jui Meng நேற்று தமது 80ஆவது வயதில் காலமானார். அவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை சுமார் 9 ஆண்டு காலம் சுகாதார அமைச்சராக சேவையாற்றியுள்ளார். Chua Jui Meng ம.சீ.சவின் முன்னாள் உதவித் தலைவராகவும் Bakri நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஐந்து தவணைக் காலம் இருந்துள்ளார். மாரடைப்பின் காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. 2009ஆம் ஆண்டு அவர் பி.கே.ஆர் கட்சியில் இணைந்தார்.

ஜோகூர் மூவாரில் பிறந்து வளர்ந்தவரான சுவா அரசியல் நுழைவதற்கு முன் ஒரு வழக்கறிஞராக இருந்துள்ளார். இதனிடையே காலஞ்சென்ற Chua Jui Meng குடும்பத்திற்கு ம.சீ. ச தலைவர் டாக்டர் Wee Ka Siong ,தற்போதை சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh உட்பட பல தலைவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!