
கிளாந்தான், தும்பாட், ஜூன் 24 – கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம், கடந்த மே 25 முதல் வீட்டில் மர்மமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளது.
31 வயதான அப்பெண், நோன்பு பெருநாளுக்கு பிறகு வீட்டில் சிரிப்பு, அழுகை, அலறல் மற்றும் குழந்தைகளின் குரல் போன்ற விசித்திரமான சத்தங்கள் கேட்கத் தொடங்கியதாக தெரிவித்தார்.
அண்மையில், சத்தங்கள் மட்டுமின்றி சில உருவங்களும் தோன்றுவதாகக் கூறப்படுவதால், குறிப்பாக குழந்தைகள் கடும் அச்சத்தில் இருப்பதாக அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சுமார் 10 மத போதகர்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சையாளர்கள் வரவழைக்கப்பட்ட போதிலும், சம்பவங்கள் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியான பயமும் தூக்கமின்மையால் குடும்பத்தினர் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், உதவி பெறும் நோக்கில் தங்களது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.



