Latestஇந்தியா

மும்பையில் அதிர்ச்சி: தரையிறங்கிய விமானத்தில் மோதி 36 பிளமிங்கோ பறவைகள் பலி

மும்பை, மே 23 – மும்பை விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, எமிரேட்ஸ் EK 508 விமானம் மோதியதில் சுமார் 36 பூநாரை எனும் பிளமிங்கோ பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

310 பயணிகளை ஏற்றி இருந்த அந்த விமானம், தரையிறங்கும் முன், பறவைகள் மீது மோதி சேதமடைந்தது.

எனினும், அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக மும்பை விமான நிலையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே, தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று சிதறி கிடந்த பிளமிங்கோ பறவைகளின் உடல் பாகங்களை சேகரித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பிளமிங்கோ பறவைகள், விமானம் மோதியதால் இறந்ததா அல்லது வேறு காரணங்களால் இறந்ததா என்பது குறித்து ஆராயப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே, அரசாங்க புள்ளி விவரங்களின் அடிப்படையில், இதுவரை மும்பை விமான நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 2023 வரை 600க்கும் மேற்பட்ட பறவைகள் மோதிய விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!