Latestமலேசியா

முஸ்லீம் தம்பதிகளிடையே குழந்தைகள் சுமை என்ற போக்கு இஸ்லாமிய போதனைகளுடன் முரண்படுகிறது

கோலாலம்பூர், ஜூன் 30 -இளைய தலைமுறையினர் குழந்தைகளை ஒரு சுமையாக கருதக்கூடாது என்பதோடு குழந்தைகள் ஒரு சுமை என்ற எண்ணத்தால் தம்பதிகள் குழந்தை இல்லாதவர்களாக இருக்க விரும்புவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிந்தனை மற்றும் போதனைக்கு எதிரானது. இஸ்லாமிய சட்டத்தின்படி பொறுப்புகளைத் தவிர்ப்பதற்காக குழந்தை இல்லாத வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பது ஊக்கமற்றது என்ற ஃபத்வா (Fatwa ) ஒன்றை கூட்டரசு பிரதேச முஃப்தி (Mufti ) அலுவலகம் வெளியிட்டுள்ளது என பிரதமர் துறையின் சமய விவகாரங்கள் அமைச்சர் டத்தோ முகமட் நயிம் மொக்தார் ( Mohamad Na’im Mokthtar ) தெரிவித்துள்ளார்.

குழந்தை இல்லாத மனநிலை குழந்தைகளைப் பெறுவதை முற்றிலும் நிராகரிக்கிறது. ஏனெனில் அவர்கள் ஒரு சுமையாகக் கருதுகின்றனர். மேலும் தம்பதிகள் திருமணத்திற்கு முன்பு வாழ்ந்ததைப் போலவே தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்பது எனது புரிதல். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. திருமணம் பொறுப்புகளுடன் வருகிறது, ஆண்கள் தலைவர்களாகவும், பெண்கள் தாயாகவும் மாறுகிறார்கள் என அவர் கூறினார். தந்தையர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு Anak Muda Hero Keluarga என்ற நிகழ்ச்சில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!