கோலாலம்பூர்,மே 6 – Jana Wibawa திட்டம் தொடர்பில் தாம் எதிர்நோக்கியுள்ள அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுக்களில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் எதிர்வாதம் செய்வதற்கு தயாராகும்படி மேல் முறையீட்டு நீதிமன்றம் எழுத்துப் பூர்வமாக தெரிவித்திருக்கும் பதிலில் தெரிவித்திருக்கிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009ஆம் ஆண்டு சட்டத்தின் 23 ஆவது விதி உட்பிரிவு (1)ன் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள் அனைத்து உள்ளடக்கங்களும் போதுமானதாக இருப்பதாக நீதிபதி Hadhariah Syed Ismail சுட்டிக்காட்டினார். எங்களது கண்ணோட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் தெளிவாக இருக்கின்றன என நீதித்துறை இணை தளத்தில் பதிவிடப்பட்ட 31 பக்க எழுத்துப்பூர்வமான அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கு முன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசு தரப்பு செய்த முறையீட்டை கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நீதிபதி Hadhariah தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அப்பீல் நீதிபதி அனுமதித்தது. பிரதமர் மற்றும் பெர்சத்து தலைவர் என்ற முறையில் முஹிடினுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அரசாங்கத்தின் அதிகாரி என்ற நிலையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கு இதுவே போதுமான ஒன்று என நீதிபதி Hadhariah தமது தீர்ப்பில் தெரிவித்தார். தமது பதவியை அவர் தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்ற இரண்டாவது அம்சமும் இக்குற்றச்சாட்டிற்கு போதுமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.