Latestமலேசியா

மூடா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சைட் சாடிக் விலகல்

கோலாலம்பூர், நவ 9 – மூடா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சைட் சாடிக் உடனடியாக விலகினார். நம்பிக்கை மோசடி, சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு ஏழு ஆண்டு சிறை , 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் இரண்டு பிரம்படியும் விதித்தது. இனியும் மூடா கட்சித் தலைவராக நீடிக்கும் தகுதியை தாம் கொண்டிருக்கவில்லையென சைட் சாடிக் தெரிவித்தார். அதே வேளையில் தாம் தொடர்ந்து மூவார் எம்.பி.யாக பணியாற்றி வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். தமக்கு ஏற்பட்ட களங்கத்தை நீதிமன்றத்தின் மூலம் அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மூடா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறினார். கட்சியின் துணைத்தலைவர் தமக்கு பதில் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கக்கூடும் என சைட் சாடிக் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!