Latest

மூத்த கலைஞர் விஜயசிங்கம் மறைவு; மலேசிய நடிகர்கள் அஞ்சலி

கோலாலம்பூர், ஜூன் 13 – ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக நாட்டின் கலைத் துறையில் தடம் பதித்த, மூத்த கலைஞரான க.விஜயசிங்கம், நேற்று தனது 79ஆம் அகவையில் காலமானார்.

இவ்வேளையில், மலேசிய கலைத்துறையின் வளர்ச்சிக்கு அளவற்ற பங்களிப்பை வழங்கிய க.விஜயசிங்கத்தின் மறைவுக்கு நடிகர்கள் பலர் தங்களின் அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இதனிடையே இன்று கோலாலம்பூரில் உள்ள அவரின் இல்லத்தில் 12 மணிக்கு அவரின் இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டு, பிற்பகல் 2 மணியளவில் செராஸ் Jalan Kuari DBKL மின்சுடலையில் அவரின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

பழம்பெரும் நடிகர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையினர் என கலைத்துறையச் சார்ந்த பலரும் அவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!