Latestமலேசியா

மெர்சிங்கில், 3 வாகனங்களை உட்படுத்திய விபத்து ; அறுவர் காயம்

மெர்சிங், பிப்ரவரி 23 – ஜோகூர், Jalan Johor Mersing – Felda Tenggaroh-வில், மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்தில், அறுவர் காயமடைந்த வேளை ; இருவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

நேற்றிரவு மணி 9.01 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, மெர்சிங் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவு அதிகாரி Mohamed Zainuddin Ahmad தெரிவித்தார்.

Perodua Alza வாகனம், Proton Satria Neo, Toyota Vios ஆகிய வாகனங்கள் அந்த விபத்தில் சிக்கிய வேளை ; அதில் Perodua Alza  வாகனத்தில் பயணித்த ஐவரும், புரோட்டோன் சத்ரியா நியோ காரில் பயணித்தவரும் காயமடைந்தனர்.

எனினும், Toyota Vios  கார் ஓட்டுனருக்கும், பயணிக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!