Latestமலேசியா

‘மேன் ஆன் தி ரன்’ ஆவணப்படத்தை நெட்ஃபிலிக்ஸ்ஸில் இருந்து அகற்ற வேண்டும்; பாஹ்மிக்கு நஜிப் கடிதம்

கோலாலம்பூர், ஜனவரி 12 – ‘மேன் ஆன் தி ரன்’ (Man on the Run) ஆவணப்படத்தை, நெட்ஃபிலிக்ஸ்ஸில் (Netflix) இருந்து அகற்ற வேண்டுமென கோரி, டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்பு அமைச்சர் பாமி பாட்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான மேன் ஆன் தி ரன்’ ஆவணப்படம், ஒட்டு மொத்த உலகையும் அதிரச் செய்த நாட்டின் 1MDB நிதி ஊழலை சித்தரிக்கிறது.

எனினும், அந்த ஆவணப்படத்தில், இடம்பெற்றுள்ள சில பதிவுகள், நஜிப்புக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தலாம், அதனால் அது நெட்ஃபிலிக்ஸ்ஸில் இருந்து நீக்கப்பட வேண்டுமென, நஜிப்பை பிரதிநிதித்து அவரது வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹமட் சாப்பி அப்துல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தனது அந்த வாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளையும், அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, இம்மாதம் எட்டாம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற, நஜிப்பின் ஊழல் வழக்கு விசாரணையின் போது, ‘மேன் ஆன் தி ரன்’ ஆவணப்படம், மிகவும் கீழ்தரமான, அவமதிப்பை ஏற்படுத்தும் ஒரு படம் எனவும், அது உடனடியாக நெட்ஃபிலிக்ஸ்ஸில்  இருந்து அகற்றப்பட வேண்டுமெனவும், நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் செக்வேரா முன்னிலையில் சாப்பி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!