Latestஇந்தியா

‘மை லார்ட்’ என சொல்வதை நிறுத்துங்கள், என் சம்பளத்தில் பாதி தருகிறேன்; இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கண்டிப்பு

புதுடெல்லி, நவம்பர் 3 – நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, வழக்கறிஞர்களால் “மை லாட்” (My Lord) அல்லது “யூர் லார்ட்ஷிப்ஸ்” (Your Lordships) என திரும்பத் திரும்ப அழைக்கப்படுவது குறித்து, இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“எத்தனை முறை ” மை லார்ட்” என சொல்வீர்கள்? அவ்வாறு சொல்வதை நிறுத்தினால், எனது சம்பளத்தில் பாதியை உங்களுக்கு தருகிறேன்” என தலைமை நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற, சாதாரண வழக்கொன்றின் விசாரணையின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் வாதங்களின் போது, நீதிபதிகளை “மை லாட்” அல்லது “யூர் லார்ட்ஷிப்ஸ்” என குறிப்பிடுவது வழக்கமாகும்.

எனினும், அதனை காலனித்துவ அடிமைச் சின்னத்தின் அடையாளம் என கூறி எதிர்ப்பவர்களும் உள்ளனர்.

அதற்கு பதிலாக நீங்கள் ஏன், “சார்” அல்லது ஐயா என பயன்படுத்தக்கூடாது என நரசிம்ஹா கேள்வி எழுப்பினார்.

இல்லையென்றால், மூத்த வழக்கறிஞர், தனது வாதத்தின் போது, எத்தனை முறை, “மை லாட்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்பதை நான் எண்ண வேண்டியிருக்குமென, நரசிம்ஹா குறிப்பிட்டார்.

2006-ஆம் ஆண்டு, இந்திய சட்டத்துறை, வழக்கறிஞர்கள் வாதங்களின் போது “மை லாட்” அல்லது “யூர் லார்ட்ஷிப்ஸ்” என அழைக்கக்கூடாது என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. ஆனால், அது நடைமுறையில் பின்பற்றப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!