Latestமலேசியா

ரவாங் டோல் சாவடி அருகே பயங்கர மோதல்: வைரல் வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

ரவாங், மே-18-ரவாங் டோல் சாவடிக்கு செல்லும் பாதையில், பொது மக்களுக்கு மத்தியில் ஒரு குழுவினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, போலீஸார் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

​சனிக்கிழமை மாலை இன்ஸ்டகிராமில் வெளியான ஒரு வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகம் தானாகவே முன்வந்து இந்த புகாரைப் பதிவுச் செய்துள்ளது.

இந்த மோதல் சம்பவம் ஜாலான் ரவாங்-பத்து ஆராங்கில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கான நுழைவுப்பாதைக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

​பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக, இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 147-ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சம்பவம் குறித்து தகவல் தெறிந்த பொது மக்கள், கோம்பாக் போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!