Latestஉலகம்

ரஷ்யாவில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சித்திர மீன்களை சாப்பிட்ட பாதுகாவலர் பணிநீக்கம்

மோஸ்கோ, பிப்ரவரி 9 – ரஷ்யா, மோஸ்கோவிலுள்ள, கலைக் கண்காட்சி மையம் ஒன்றில், கலைப்படைப்புகளை சாப்பிட முயன்ற பாதுகாவலர் ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

“Escape of the Goldfish” எனும் தலைப்பிடப்பட்ட அந்த சித்திர கலைப்படைப்பில், கிண்ணம் ஒன்றிலிருந்து “Goldfish” எனும் இரு தங்க மீன்கள் வெளியே எட்டி குதிப்பதை போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

எனினும், அந்த மீன்கள் காணாமல் போனதை கண்காட்சி ஏற்பாட்டளர் உணர்ந்ததை அடுத்து, பாதுகாவலரின் அந்த விநோதமான சதிநாச செயல் அம்பலமானது.

“Escape of the Goldfish” எனும் அந்த சித்திரத்தின் தனித்துவத்தால் ஈர்க்கப்பட்ட பாதுகாவலர், லாவகமாக அதன் அருகில் சென்று இரு மீன்களை இழுத்துச் சேதப்படுத்தும் காணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது.

அம்மீன்களை முதலில் நுகர்ந்து பார்க்கும் அந்த பாதுகாவலர் பின்னர் அவற்றை வாயில் போட்டு மென்று திண்கிறார்.

சம்பவ இடத்தில் இருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா வாயிலாக அச்சம்பவம் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!