Latestஉலகம்

ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டது; இருவர் பலி, 50 பேர் காயம்

மோஸ்கோவ், ஜூன்-28, வட ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.

50 பேர் வரை காயமடைந்திருக்கலாம்; அவர்களில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புதன்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில் ரயிலின் 14 பெட்டிகளில் 9 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன.

இருவரின் சடலங்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டன; ஒருவரைக் காணவில்லை என அதிகாரிகள் கூறினர்.

சம்பவத்தின் போது 200 பயணிகள், 20 பணியாளர்கள் ஆகியோரை ரயில் ஏற்றியிருந்தது.

கனமழையால் தண்டவாளம் பாதிக்கப்பட்டதே அவ்விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!