Latestஉலகம்

லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த தேள் ; பயணிகள் அதிர்ச்சி

லண்டன், மார்ச் 27 – இங்கிலாந்து, லண்டனிலுள்ள, ஹீத்ரோ விமான நிலையத்தில், தேள் ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பயணி ஒருவரின் பயணப் பையில் புகுந்த அந்த தேள், ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்ததாக கூறப்படுகிறது.

எனினும், அந்த கருப்பு நிற தேள் எந்த நாட்டிலிருந்து, ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

பிரிட்டனில், வழக்கமாக மஞ்சள் வால் கொண்ட தேள் மட்டுமே உள்ளது. அதனால், விமான நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தேளின் பூர்வீகம் பிரிட்டன் அல்ல.

கருப்பு நிற தேள்கள், பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, கிழக்கு ஆசியா, தெற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் தான் காணப்படும்.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும், குளவி போல வலுவாக கொட்டும் சக்தி தேளுக்கு உண்டு.

ஹீத்ரோ விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த தேள், யாருக்கும் பாதகம் ஏற்படாதவாறு அங்கிருந்து அகற்றப்பட்டதை, விமான நிலைய பணியாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!