Latestமலேசியா

லாஹாட் டத்துவில் ஆற்றை கடக்கும் பயணத்தின்போது நீர் பெருக்கில் மூவர் மூழ்கி மரணம்; மேலும் 3 பேர் காணவில்லை

கோத்தா கினபாலு, மே 6- River Trekking எனப்படும் ஆற்றை கடப்பதற்கான உல்லாச பயணம் சென்றவர்களில் மூவர் நீர் பெருக்கினால் மூழ்கி மாண்ட வேளையில் மேலும் 3 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. இந்த துயரச் சம்பவம் சபா கிழக்குக் கரை பகுதியிலுள்ள Maksian பள்ளத்தாக்கில் Makuau வில் நேற்றிரவு ஏற்பட்டது. வெள்ளத்தின் காரணமாக திடீரென ஆற்று நீர் பெருகத் தொடங்கியதால் அந்த உல்லாச பயணத்தில் இடம்பெற்றிருந்த 17பேர் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்னதாக 9 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்புடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த குழுவைச் சேர்ந்த காயம் அடைந்த இதர இரண்டு உறுப்பினர்கள் பாதுகாப்புடன் நீந்தி கரையேறினர்.

இரவு மணி 8.28 அளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக லாஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் Sumsoa Rashid தெரிவித்தார். இரவு மணி 9.36அளவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தாங்கள் சென்றடைந்ததாக அவர் கூறினார். முதலில் நாங்கள் 9 பேரை மீட்டோம். பிறகு தான் ஒரு மரக்கட்டைக்கு அடியில் மூவரின் உடல்கள் சிக்கிக் கிடப்பதை அதிகாலை மணி 1.37 அளவில் நாங்கள் கண்டுப்பிடித்தபின் அவர்களது உடல்களை மீட்டோம் என Sumsoa Rashid கூறினார். காணாமல்போன மூவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட் வருவதாக கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!