Latestமலேசியா

லுமுட்டில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியின் போது நடுவானில் மோதல்; 10 பேர் பலி

லுமுட், ஏப் 23 – அரச மலேசிய கடற்படைத் தளத்தின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கான மரியாதை ஏற்கும் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 10 பேர் மாண்டனர். HOM மற்றும் Fennec வகையைச் சேர்ந்த அந்த இரண்டு ஹெலிகாப்டர்களும் சித்தியவான் மைதானத்திலிருந்து இன்று காலை மணை 9.03க்கு புறப்பட்டன. லுமுட் அரச மலேசிய கடற்படை தளத்தின் வான்பகுதியில் பயிற்சி அணிவகுப்பிற்காக தயாரானபோது அந்த இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றை ஒன்று மோதிக்கொண்ட காணொளியும் வைரலானது. அந்த ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதைத் தொடர்ந்து அவை கட்டுப்பாட்டை இழந்து கீழ விழுந்தன.

லுமுட் அரச மலேசிய கடற்படை விளையாட்டரங்கின் படியில் HOM ஹெலிகாப்டர் விழுந்த வேளையில் Fennec ஹெலிகாப்டர் அந்த விளையாட்டரங்கின் நீச்சல் குளத்தில் விழுந்தது. சம்பவம் நிகழ்ந்தபோது HOM ஹெலிகாப்டரில் மூன்று பயணிகளுடன் நான்கு பணியாளர்கள் இருந்தனர். Fennec ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!