Latestமலேசியா

சபாவில் மூதாட்டி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி

கோத்தா கினபாலு, ஆகஸ்ட்-21- சபா, கோத்தா கினபாலுவில் Kampung Darau பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், மூதாட்டி ஒருவர், அவரது மகன், பேத்தி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட அத்தீ விபத்து குறித்து அதிகாலை 1.43 மணிக்குத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புக் குழுவினர் அதிகாலை 2.10 மணிக்குத் தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் வீட்டைச் சோதனையிட்டதில் தீயில் கருகி உயிரிழந்த அம்மூவரின் உடல்களையும் அவர்கள் மீட்டனர்.

தீயில் பலியானவர்கள் 67 வயதான Loupin Adow, அவரது 50 வயது மகன் Azman Maduin மற்றும் 29 வயது பேத்தி Nurul Asyiqin என அடையாளம் காணப்பட்டது. Nurulலின் 34 வயது கணவர் தீக்காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

Nurul தீ பற்றிய வீட்டில் இருந்து முதலில் வெளியேறி விட்டாலும், தமது பாட்டியையும் மாமாவையும் காப்பாற்ற மீண்டும் உள்ளே நுழைந்து துரதிஷ்டவசமாக அவர்களுடன் சேர்ந்து தீயில் கருகி மாண்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!