Latestமலேசியா

வங்காளதேசி கொலை; இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 2 – இரண்டு வாரங்களுக்கு முன் வங்காளதேச பிரஜை ஒருவரை கொலை செய்ததாக இருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 36 வயதுடைய வங்காளதேச ஆடவர் முகமட் மிலோன் மியா, ( Mohammad Milon Mia ) மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த 64 வயதுடைய காதர் பாட்சா என்ற காதிர் ஒளி முகமட் ஷாரிப் ( Kader Batcha @ Kader oli Mohamed Sharif ) ஆகியோர் பங்சார், ஜாலான் டிரவர்ஸ்ஸில் (Jalan Travers) , ஜூன் 16ஆம் தேதியன்று காலை மணி 7.39 அளவில் அப்பு சந்திரா பர்மூன் ( Apu Chandra Barmoh ) என்பவரை கொலை செய்ததாக மாஜிஸ்திரேட் Illi Marisqa Khalizan முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கொலை குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் குற்றஞ்
சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

தண்டனை சட்டத்தின் 302 ஆவது விதியின்கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் மரணம் அடையும்வரை தூக்கு அல்லது 40 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 12க்கும் குறைவான பிரம்படி ஆகியவை அவர்களுக்கு விதிக்கப்படலாம். அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!