ஈப்போ, ஏப் 21 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 242. 3ஆவது கிலோமீட்டரில் விரைவு பஸ் ஒன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து அதிலிருந்து 16 பேர் நெருக்கடியான தருணங்களை அனுபவித்து உயிர் தப்பினர். நள்ளிரவு மணி 12.01 க்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, Kuala kangsar மற்றும் Meru Raya தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த பணியாளர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக தீ மற்றும் மீட்புத்துறை நடவடிக்கைக்கான மூத்த அதிகாரி Mohd Fawwaz Abdul Jamil தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், விரைவு பஸ் 80 விழுக்காடு சேதமடைந்தது . அந்த பஸ்ஸிருந்த ஓட்டுனர் உட்பட 16 பேர் பாதுகாப்புடன் மற்றொரு பஸ்ஸிற்கு மாற்றப்பட்டனர் என இன்று தீயணைப்புத் துறையின் முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் Mohd Fawwaz சுட்டிக்காட்டினார். அதிகாலை மணி 1.34 அளவில் அந்த பஸ்ஸில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.