பூனே, மஹாராஷ்ட்ரா, ஜூன்-18, இந்தியா, மஹாராஷ்ட்ராவில் (Maharashtra) வீட்டுக்கு வெளியே குளிக்கச் சென்ற போது வயர் கம்பியில் துண்டை மாட்டிய ஆடவர், மின்சாரம் தாக்கி உயிரிந்தார்.
அக்கம்பியில் மின்சாரம் பாய்ந்துக் கொண்டிருந்தது தெரியாமல், 47 வயது கட்டுமானத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த ஓடி வந்த அவரின் மகனும், மனைவியும் அவரைக் காப்பாற்ற முயன்ற போது, அவர்களும் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
இன்னொரு மகள் வகுப்பில் பங்கேற்பதற்காக வெளியில் சென்றால் உயிர் தப்பினார்.
பூனேவில் வாடகை வீட்டில் இருந்த அக்குடும்பம், துணிகளைக் காய வைப்பதற்காக அறையின் தகர சுவரில் இரும்புக் கம்பியை பயன்படுத்தியுள்ளது.
வீட்டு முற்றத்தில் மின் கம்பியை கட்ட பயன்படுத்திய குழாய் கனமழைக் காரணமாக வளைந்து, அதன் விளைவாக மின்சாரம் சுவரை அடைந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக மின்சார வியோக வாரியம் அறிவித்துள்ளது.
அப்பகுதி வாழ் மக்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பது, இம்மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவாகும்.
முந்தைய 3 சம்பவங்களில் இரு சிறார்கள் உள்ளிட்ட நால்வர் பலியாயினர்.