
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், தானா மேராவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மரப்படகு, மலேசியாவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.
பல நூறு ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த மரப் படகு, தானா மேரா ஆற்றங்கரையில் புதைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே மரத்தினால் செதுக்கப்பட்ட இந்த படகு, அந்த காலத்தின் நுணுக்கமான கைவினைத்திறனுக்குச் சான்றாகத் திகழ்கிறது.
கிளந்தான் ஆற்றின் வழியே நடைபெற்ற பண்டைய வர்த்தகத் தொடர்புகளைப் புரிந்துகொள்ள இந்த படகு ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
தொடக்கக் கட்ட ஆய்வுகளின்படி, இது மலாயா மக்களின் கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் குடியேற்ற வரலாற்றை விளக்கும் ஒரு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.
தேசிய பாரம்பரியத் துறை தற்போது இந்த படகைப் பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் பல நூற்றாண்டுகளாக நீரில் மூழ்கியிருந்ததால், காற்று பட்டால் மரம் சிதைவதைத் தடுக்க உடனடி இரசாயனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



