Latestமலேசியா

வாடிக்கையாளரின் காரில் ஊர் சுற்றி விபத்தில் சிக்கிய கார் பட்டறை ஊழியர்

சிலாங்கூர், பிப்ரவரி 18 -புன்சாக் ஆலாமில் வாடிக்கையாளரின் Honda Accord காரை எடுத்துக் கொண்டு ஜாலியாக பயணம் செய்த கார் பட்டறை ஊழியர், அதனை 6 கார்களுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

புன்சாக் ஆலாமில் கடைவரிசைப் பகுதியொன்றின் கார்நிறுத்துமிடத்தில் 6 வாகனங்கள் மோதிக் கொண்ட காணொலி டிவிட்டரில் பதிவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர் நெட்டிசன்களின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

கருப்பு நிற Honda Accord கார் சில வாகனங்களை மோதி அவற்றுக்கு கடும் சேதம் விளைவித்திருப்பது அந்தக் காணொலியில் தெரிகிறது.

காரின் நொறுங்கியப் பகுதிகளைச் சிலர் கவலையோடும், ஆத்திரத்திலும் பார்வையிடுவதை அதில் காண முடிந்தது.

வீடியோவை எடுத்தவர் பகிர்ந்த தகவலைப் பார்த்தால், கார் பழுதுப் பார்க்கும் கடைகள் அதிகமிருக்கும் இடத்தில் தான் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

சம்பவம் குறித்து உண்மை நிலவரம் எதுவும் தெரிய வரா விட்டாலும், சம்பந்தப்பட்ட ஊழியர் சோதனை ஓட்டமாக ( Test Drive) அக்காரை வெளியில் எடுத்துச் சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம் என அந்த டிவிட்டர் பதிவு மேலும் கூறியது.

Test Drive என்ற பெயரில் ஊரார் காரில் ஜாலியாக சுற்றி வருவது சிலருக்கு புதிய Trend போல என சில நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!