Latestமலேசியா

வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்ட மோசடி; எந்த ஒரு இணைப்பையும் திறக்க வேண்டாம், சைபர் செகுரிட்டி எச்சரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 7 – வாட்ஸ்அப்பில், ஆள்மாறாட்டம் வாயிலாக பண மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் தொடர்பில், சைபர் செகுரிட்டி மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த எச்சரிக்கை சைபர் செக்குரிட்டியின் முகநூல் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் ஆள்மாறாட்டம் செய்து, கும்பல் ஒன்று பணமோசடியில் ஈடுபட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள், பின்னர் வாட்ஸ்அப்பில் அவர்களுக்கு மோசடி இணைப்புகளை அனுப்பி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

அந்த இணைப்பை திறப்பவர்களின், வாட்ஸ்அப் ஊடுருவப்பட்டு, உரிமையாளரே அதனை பயன்படுத்த முடியாமல் போகும்.

அந்த வாட்ஸ்அப்பை தனது கட்ப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் மோசடி நபர்கள், அதனை பயன்படுத்தி ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, பாதிக்கப்பட்டவரின் வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருக்கும் அவரது உறவினர்கள், நண்பர்களிடமிருந்து, அக்கும்பல் பணம் பறித்து வருகிறது.

அதனால், வாட்ஸ்அப்பில், அனுபப்படும் எந்தவிரு இணைப்பையும் திறக்க வேண்டாம் என, சைபர் செக்குரிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம், உண்மை நிலவரத்தை உறுதிச் செய்துக் கொள்ளாமல் பணமாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அது அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!