Latestஉலகம்

வாய் புற்றுநோயைக் கண்டறியும் லாலிபாப்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பிரிட்டன், மார்ச் 25 – வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், சுவையூட்டப்பட்ட லாலிபாப்களை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இந்த லாலிபாப்கள் ஒரு விரைவான நோயறிதலாக மட்டுமல்லாமல் மிகவும் உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Birmingham பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த லாலிபாப்கள் ஸ்மார்ட் ஹைட்ரோஜெலால் (smart hydrogel) ஆனது.

ஸ்மார்ட் ஹைட்ரஜல் உமிழ்நீர் மற்றும் புரதங்களை உறுஞ்சுகின்ற தன்மை கொண்டவை. இதன்வழி உமிழ்நீரில் உள்ள புரதத்தை எளிதில் ஸ்மார்ட் ஹைட்ரஜல் உறிஞ்சி, வாய்வழி புற்றுநோயை விரைவில் கண்டறிந்து விடும், என Birmingham பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் Ruchi Gupta கூறுகிறார்.

இந்த திட்டத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!